உளவியல்

உளவியல் அல்லது மனோதத்துவம் என்பது மனிதனின் அல்லது மிருகத்தினுடைய மனதின் செயல்பாடுகளை (mental functions) மற்றும் நடத்தைகளை (behaviors) ஆய்வு செய்வதாகும். இந்தத் துறையின் தொழில்முறை நெறிஞர் அல்லது ஆய்வாளர் ஒரு உளவியலாளர் (psychologist) எனப்படுவர். உளவியலாளர் சமூக (social) அல்லது நடத்தை விஞ்ஞானிகள் (behavioral scientists) என்றும் வகைப்படுத்தப்படுவர். உளவியல் ஆய்வு என்பது அடிப்படை(basic) அல்லது செயல்முறை (applied) சார்ந்ததாகக் கருதப்படும். உளவியலாளர்கள் தனிப்பட்ட மன செயல்பாடுகளின் (mental functions) பங்கினை மற்றும் சமூக ஒழுக்கத்தை (social behavior) புரிந்து கொள்ள முயற்சிக்கிக்கும் பொழுது, அடிப்படையான உளவியல் (physiological) மற்றும் நரம்பியல் (neurological) செயல்பாடுகளும் வெளிப்படுத்தப்படுகிறது.

உளவியலின் அடிப்படை ஆய்வு என்பது உள்ளுணர்வு, அறியும் ஆற்றல், கவனம், மன உணர்வு அல்லது உணர்ச்சி வேகம், இயல்பு ஊக்கம், மூளை செயல்பாடுகள், ஆளுமை, நடத்தை மற்றும் உள்ளார்ந்த தொடர்புகள் ஆகியவற்றை கொண்டதாகும். சில, குறிப்பாக ஆழ்ந்த உளவியல் என்பது மயக்கநிலை மனது என்று கருதப்படுகிறது. உளவியலாளர்கள், உளவியல் சமூக வேறுபாடுகளுக்கு இடையேயான காரணம் மற்றும் எதிரெதிரான தொடர்புகளைத் தீர்மானிப்பதற்கு மெய்யறிவான முறைகளை பின்பற்றுவர், மருத்துவ உளவியலாளர்கள் சில நேரம் குறிப்பால் உணர்த்தும் முறையை அல்லது இதர தூண்டும் நுட்பங்களை சார்ந்திருப்பர்.

உளவியல் அல்லது மனோதத்துவம் (Psychologyசமூக அறிவியற் துறைகளுள் ஒன்றாகும். உளவியற் செயற்பாடுகள், நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்வியான இது நடத்தை அறிவியலுக்குள்ளும் அடங்குகின்றது. 1879 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் வுண்டட் ஜெர்மனியிலுள்ள லீய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். இதுவே உளவியற் கல்வியின் தொடக்கம் எனப்படுகிறது.

சைக்காலஜி ஒரு கிரேக்கச் சொல் “logia” விலிருந்து உருவான சொல்லாக்கம் ஆகும். அதன் பொருள் ‘மனதைப் படிப்பது’.ψυχή psukhē எனில் ‘சுவாசம், ஆவி, ஆன்மா’ -λογία. logia எனில் ‘ஆய்வு’ [1] அதுவும் ஒரு கல்விக் கழகத்தில் பாடப் பயிற்சி ஒழுங்குமுறை மற்றும் அறிவியலார்ந்த மானிட, விலங்குகளின் மனோ செயல்முறை மற்றும் நடத்தை பற்றியதாகும். அவ்வப்போது ஓர் அறிவியல் வழிமுறைக்குஎதிராகவோ, கூடுதலாகவோ பயன்படுத்துகின்றபொழுது, அது குறியீட்டுப் பொருள் விளக்கம் மற்றும் விமர்சன ஆய்வை சார்ந்துள்ளது. இருந்தபோதிலும் சமூக இயல் போன்ற சமூக அறிவியல்களைவிட முக்கியத்துவம் குறைந்தே உள்ளது. அப்படிப்பட்ட அபூர்வநிலை ஆய்வுகளை உளவியல் ஞானிகள் புலன் உணர்வு, அறிவாற்றல், கவனம், மனஎழுச்சி, செயல்நோக்கம், ஆளுமை, நடத்தை,தனிப்பட்ட உறவுகள் இடையில் உள்ளவை ஆகிய அனைத்தும் ஆய்ந்தறிகின்றனர். சில ஆழ்நிலை உளவியல் ஞானிகள் பிரத்தியேகமாக, தன்னுணர்வற்ற மனம் பற்றி புத்தாய்வு செய்கின்றனர்.

உளவியல் ஞானம் பல்வேறு மானிட செயல்பாடுள்ள துறைகளில் பயன்படுத்தப் படுகின்றன. அன்றாட வாழ்வில் உள்ள நடைமுறைகளில் அதாவது, குடும்பம், கல்வி, தொழில் மற்றும்– மனநலப்பிரச்சினைகளுக்குரிய சிகிச்சை யாவும் ஆராயப் படுகின்றன. உளவியல் ஞானிகள் தனி நபர் மற்றும் சமூக நடத்தை பற்றிய மனோ ரீதியான வினைச் செயல்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். மேலும் நரம்பு மற்றும் உடல் சார்ந்த வழிமுறைகளின் அடிப்படை அம்சங்களை புத்தாய்வு செய்கின்றனர். உளவியல் ஆய்வில் துணைத் துறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் அடங்கி உள்ளன. அத்தகைய துறைகளாவன:மானிட வளர்ச்சி,{ 1} விளையாட்டுகள், உடல்நலம், தொழிற்சாலைஊடகம், மற்றும் சட்டம் முதலியனவாகும். சமூக அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள் மற்றும் கலை, இலக்கியங்கள், மனிதப்பண்புகள் யாவும் பற்றிய ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதே உளவியலாகும். ஓர் உளவியல் ஞானி என்பார் உளவியல் பயிற்றுவிப்பவரும், தொழில்முறைக் கோட்பாட்டை பின்பற்றுபவரும் ஆவார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this:
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close