குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய சமூக நல அதிகாரிகள்

on

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடியில் நடக்கவிருந்த குழந்தை திருமணம் நிறுத்தப்பட்டது. பந்தலூர் அருகே சேரம்பாடி சோலாடி எஸ்டேட் புதுப்பாடி சேர்ந்த சித்தன் என்பவரின் பேத்திக்கும், கேரள மாநிலம் மேப்பாடியை சேர்ந்த மாதவன் என்பவரின் மகன் சீனிவாசனுக்கும் 12ம் தேதி திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதில், திருமணம் உதவித்தொகை பெறுவதற்கான மனுவை சமூக நலத்துறையில் பெண்ணின் உறவினர்கள் வழங்கினர். அதில், மணப்பெண்ணின் வயதை பரிசீலனை செய்த துறை அதிகாரிகள் 18 வயது பூர்த்தி அடையாததை கண்டுபிடித்தனர். பின்பு, இந்த திருமணத்தை நிறுத்துமாறு தெரிவித்தனர். ஆனால், நேற்று காலை முதல் நிச்சயதார்த்த நிகழ்ச்சியும், விருந்தும் நடந்தது. தகவல் அறிந்த சமூக நலத்துறை அலுவலர்கள் பகீரதி, தில்லையம்மாள், விலாசினி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, நிச்சய நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், 
“மணப்பெண்ணான சிறுமியை இன்று பகல் 11 மணிக்குள் ஊட்டி சமூக நலத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்,’ என உத்தரவிட்டு சென்றனர். இதனால், திருமண வீட்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s