சுகாதார துறையினர் “நித்திரை’ சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏராளம்

on

பந்தலூர் : நெல்லியாளம் நகராட்சியில் சுகாதார துறையின் “நித்திரையால்’ சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சி இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நகராட்சியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையில், பல இடங்களில் குப்பை குவியல்களும், கழிவு நீர் கால்வாய் அடைப்பும் ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் நகராட்சியின் 21வார்டுகளிலும் சேகரிக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் திட்டமும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் மாறி வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திட்டத்திற்காக 2 ஏக்கர் நிலத்தில், உரக்கிடங்கு, குப்பை தரம் பிரிக்கும் தளம், சுற்றுச்சுவர் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மின்சாரம்; தண்ணீர் வசதி இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஒரு சில பணியாளர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளதால், தற்போது குப்பைகள் தரம் பிரிப்பதற்கு பதில் எரிக்கப்படுகிறது. இதனருகே ஏலமன்னா ஆதிவாசி காலனியும், ஏலமன்னா கிராமம், பன்னிக்கொல்லி ஆதிவாசி காலனி, டான்டீ பகுதிகள் அமைந்துள்ளதால், இங்கு வாழும் மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். மேலும், இங்கு உற்பத்தியாகும் ஈ மற்றும் கொசுக்களால் நோய்கள் பரவி வருகின்றன. இதற்கு நகராட்சியின் சுகாதார துறை போதிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நன்றி: தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s