உதகை மலைரயில் பயணத்துக்கு மே 2வது வாரம் வரை முன்பதிவு

உதகை, பிப். 11: நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமான மலைரயில் பயணத்துக்காக மே மாதம் 2வது வாரம் வரை தற்போது முன்பதிவு முடிவடைந்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற நீலகிரி மலைரயிலில் பயணம் செய்வதற்காக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் மலைரயிலில் பயணம் செய்ய விரும்பும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது பேருந்துக் கட்டணத்தைவிட நீலகிரி மலைரயில் கட்டணம் குறைவாகவே இருப்பதால் சுற்றுலாப் பயணிகளோடு உள்ளூர்வாசிகளும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலை ரயிலின் இன்ஜின் உந்துசக்தி குறைந்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே ஒரு பெட்டி குறைக்கப்பட்டு 3 பெட்டிகளுடன் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.

அதேசமயம், உதகை- குன்னூர் வழித்தடத்தில் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு 5 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதன்மூலம் ரயில்வே நிர்வாகம் கூடுதலான வருவாய் பெற்று வருகிறது.

கோடை சீசனுக்காக மலைரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு முடிவடையும் நிலையில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்திலேயே மார்ச் மாத இறுதிவரை முன்பதிவு முடிவடைந்திருந்த நிலையில், தற்போது மே மாதம் 2வது வாரம் வரை முன்பதிவு முடிவடைந்துள்ளது.

நீலகிரி மரையிலில் பயணம் செய்ய 3 மாதத்திற்குள் முன்பதிவு செய்யலாம் என்ற நிலையை மாற்றி தற்போது 4 மாதம் வரை மு பதிவு செய்யலாம் என்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதற்கிடையே ரயில்வே நிர்வாகம் கோடை சீசனுக்கான சிறப்பு மலைரயிலையும் விரைவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே தடையில்லாத ரயில் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s