மனமே வாழ்க்கை

 Image

மனம் மனித மாளியின் மையமண்டபம். அதில் நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே மாறிவிடுகிறாய். குழந்தையைப் பற்றி சிந்திப்பவன் குழந்தையாகிறான். அன்பைப் பற்றி சிந்திப்பவன் அன்பு மயமாகிறான். செல்வத்தைப் பற்றிச் சிந்திப்பவன் செல்வந்தன் ஆகிறான். வாழ்வதும்,தாழ்வதும் அவரவர் மனமே காரணமாகிறது.மனதுக்கு ஊட்டப்படும் நம்பிக்கையே வாழ்வைத் தீர்மானிக்கிறது. அதை தான் “உன் வாழ்க்கை உன் கையில்”என உச்சரிக்கிறார்கள். மனம் உடலில் உள்ள உருவமற்ற மிகசக்தி பெற்ற பகுதி. எல்லா செயல்களும் மனதின் எண்ணங்களின் மூலம் தான் தீர்மானிக்கப்பட்டு நடைபெறுகிறது.உடல் நல குறைபாடுகளுக்கு பெரும்பாலும் மன நல கோளாறுகள் தான் காரணமாகிறது. அதனால் மனதிற்கு நலிவான அம்சங்கள் பற்றியோ,குறைபாடுகள் அல்லது தோல்விகள் பற்றியோ பேசுவதை தவிர்க  வேண்டும் என்பதே மன நலம் பற்றிய விழிப்புணர்வாக கருதப்படுகிறது. இன்றைய சமுதாயத்தில் பல்வேறு சூழ்நிலைகளாலும்,சமூக பிரச்சனைகளாலும் மனிதனின் மன நலம் பாதிக்கப்படும் என்பது உண்மையே. குடும்ப பிரச்சனைகள்,வேலையில்லா திண்டாட்டம்,செக்ஸ்,ஏமாற்றம்,ஏக்கம்,தோல்வி,பாதுகாப்பின்மை ,உணர்வு சந்தேக புத்தி,போட்டி,பொறாமை,தவறான சேர்க்கை ,போதை பழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் மனிதனுக்கு மனநலம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. மக்கள் உடல் நலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்திற்கு கொடுப்பது இல்லை. இதனால் மனநலம் பதிக்கப்டுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என கணக்கிடுகிறது புள்ளிவிவரம். துன்பங்கள் ஏற்படும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. மனச்சோர்வு உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது. தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால்,செய்து வரும் பணியில் ஈடுபாடு இருக்காது.இதனால் எந்த செயலும் நடைபெறாது. எந்த செயலும் நடைபெறாத காரணத்தால் வாழ்க்கை நிலை பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அறிகுறி உண்டு,அதுபோல் மன நோய்க்கும் சில அறிகுறிகள் உண்டு. இந்த அறிகுறிகளை “பிசிகல் சிம்டம்ஸ்”மற்றும் “சைகாலஜி சிம்டம்ஸ்”ஆகும். உடல் சோர்வு,பசி இன்மை,வயிற்று கலக்கல் போன்றவை “பிசிகல் சிம்ப்டம்ஸ்”ஆகும். பய உணர்வு,விபரீத கற்பனை,தேவையற்ற சிந்தனை,மனக்கலக்கம் போன்றவை “சைக்காலஜி சிம்டம்ஸ்”ஆகும். எந்த நிகழ்ச்சியும் நமது மன மகிழ்ச்சியை பாதிக்காது என்ற திடமான எண்ணம் இல்லாதவர்களைத்தான் இந்த பிரச்சனை தாக்குகிறது. பயம்,வெறுப்பு,அவநம்பிக்கை மனதிற்குள் இவை எழ முயற்சித்தால்,அந்த எண்ணங்களை அடியோடு அகற்றிவிட வேண்டும். எப்போதும் நட்பார்ந்த நேர்மறை எண்ணங்களையே மனதில் புகுத்த வேண்டும். கலகலப்பான,மகிழ்ச்சியான,செல்வச் செயிப்பான சிந்தனைகளையே மனதில் உருவகப் படுத்திக்கொள்ளவேண்டும். அப்படி பழக்கப்படுத்தா விட்டால்,எதிர்மறையான வேறு ஒன்றையும் மனம் உள்ளே அனுமதிக்காமல் ஓர் போர் வீரனை போல் எதிர்த்து நிற்க பழக்கப்பட்டுவிடும். மனிதன் உலக வாழ்விலும் இல்லத்திலும் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அவைகளால் மன அழுத்தம்,மன இறுக்கம்,மன சோர்வு,மன அதிர்ச்சி,கவலை போன்றவை மனக் கோளாறுகள் ஏற்பட்டு உடல் நிலை பெரிதும் பாதித்துவிடுகிறது.  அவை முடிவில் அதிக ரத்த அழுத்தம்,மூளைக் கொதிப்பு,சர்க்கரை வியாதி,புற்று நோய் மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு வழி வகுக்கிறது. ஒருவன் ஒவ்வொரு செயலையும் மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் செய்வது அவசியம். மனம் மகிழ்ச்சியாகவும் நலமுடனும் செயல்பட்டால் உடலுக்கு வந்த நோய்கள் பரந்து போய் விடும் என்பதே உண்மை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s