திருமணம்:

இந்த யுகம் கலி யுகம். கலி என்று பார்த்தால் அது சனி. சனி யுகம் என்றும் சொல்லலாம். சனி என்று பார்த்தால் எல்லாம் அவசரகதி, வக்கரகதி என்ற ரீதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் எல்லாம் பார்ப்பதில்லை.

அதனால், முன்பைவிட தற்பொழுது பாலுணர்வு அதிகரித்துள்ளது சிறுவர்களிடம். அதனால்தான் உலக அறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விழிப்புணர்வு கொண்டுவர வேண்டும், பாலியல் குறித்த பாடம் கொண்டுவர வேண்டும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதனால்தான், 22 அல்லது 23இல் திருமணம் முடித்தால் நல்லது. ஒவ்வொரு குறிப்பிட்ட வயதிற்கும் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆளுமை இருக்கும். அப்படி பார்க்கும் போது 20 முதல் 24 வயது வரை சுக்ரன் மற்றும் இராகுவினுடைய காம்பினேஷனில் வருகிறது. இது ஒருவிதமான கிளர்ச்சியை உண்டாக்கும். இதனால் பாதை மாறும் வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு, குழு மனப்பான்மை, குழுவாகச் சேர்ந்து தாக்குதல், குழுவாகச் சேர்ந்து திட்டமிடுதல், இது நன்மைக்கும் கொண்டு போகும் தீமைக்கும் கொண்டு போகும். அதனால்தான் குறிப்பாக 22, 23இல் மணம் முடித்தால் செம்மையாக இருக்கும்.

ஆண்களுக்கு? 

ஆண்களுக்கு 24, 25, 27 இதில் திருமணம் முடித்தால் நலம். ஏனென்றால் குருவினுடைய ஆதிக்க எண்ணாக வரக்கூடியது எண்ணாக வரக்கூடியது, அதனால் இதில் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும்.

 

 

கட்டாயத் திருமணம்:

தெற்காசிய பூர்வீகம் கொண்டவர்களிடையே கட்டாயத் திருமணம் அதிகமாக உள்ளது.

பிள்ளைகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ய பெற்றோர்கள் வற்புறுத்துவதென்பதை இங்கிலாந்து வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக்குவதற்கான புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டுவரவுள்ளது.

ஸ்கொட்லாந்து பகுதியில் இப்படியான ஒரு சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

இங்கிலாந்தில் மட்டுமே இளம் பெண்களும் சிலவேளை இளைஞர்களுமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டாயிரம் பேர் அவர்தம் குடும்பத்தினரால் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்த வழக்கத்தை ” அடிமைத்தனத்துக்கும் ஒரு பங்கு அதிகம்” என்று பிரிட்டிஷ் பிரதமர் கெமரன் வர்ணித்துள்ளார்.

“கலாச்சாரப் பின்னணி சார்ந்த வழக்கம் என்று கருதி இந்த நாட்டில் கட்டாயத் திருமணங்களுக்கு நீண்ட காலம் இடம்தந்துவிட்டோம். ஆனால் இனிமேலும் இது அனுமதிக்கப்படக்கூடாது.”

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன்

பாகிஸ்தானிய, வங்கதேச மற்றும் இந்தியப் பூர்வீகம் கொண்ட மக்களிடையேதான் இந்தக் கட்டாயத் திருமணம் அதிக அளவில் நடக்கிறது.

ஆனால் ஆப்பிரிக்க தென்னமெரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய பூர்வீகம் கொண்டவர்களின் சமூகங்களிலும் கொஞ்சம் எண்ணிக்கையில் இப்படியான கட்டாயத் திருமணங்கள் நடப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இளம் பெண்கள் பலர் திடீரென பள்ளிக்கூடம் வராமல் போவதும், அவர்களில் பலர் அவர்தம் குடும்பத்தினரால் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுவதென்பதும் அதிகரித்துவருவதாக பிராந்திய அரசாங்கங்கள் உணர்ந்ததை அடுத்து, கட்டாயத் திருமணங்களை தடுப்பதற்கென்ற விசேடப் பிரிவு ஒன்றை பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் ஏற்படுத்தியிருந்தது.

தற்போது அமலில் இருக்கின்ற சட்டத்தின் படி, தமது பிள்ளைக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கின்ற பெற்றோர்கள், பிள்ளையை பொய்சொல்லி அடைத்து வைத்தார்கள், அடித்தார்கள் ,துன்புறுத்தினார்கள் என்றால் மட்டும்தான் அந்தப் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருக்கிறது.

வெறுமனே கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைப்பதற்காக மட்டும் இவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது.

ஆனால் கட்டாயத் திருமணம் தொடர்பான பல சம்பவங்கள் செய்திகளில் பெரிதும் அடிபட்டுவந்த நிலையில், ஒருவரைத் திருமணத்துக்காக கட்டாயப் படுத்துவதென்பதையே ஒரு கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது.

திருமணத்துக்காக கட்டாயப்படுத்துவதென்பதை குற்றச் செயலாக அறிவிப்பது பற்றி முந்தைய தொழிற்கட்சி அரசாங்கமும் பரிசீலித்திருந்தது என்றாலும், அத்திட்டத்தை பின்னர் அது கைவிட்டிருந்தது.

ஆனால் தற்போதைய கன்சர்வேடிவ் அரசாங்கம் இச்சட்டத்தை அமலுக்கு கொண்டுவரும் முடிவில் உள்ளனர். இந்த புதிய சட்டம் அமலுக்கு வருமானால் பிள்ளைகளை திருமணத்துக்கு கட்டாயப்படுத்த பெற்றோர் பயப்படுவார்கள் என அமைச்சர்கள் நம்புகின்றனர்.

ஆனால் தமது பெற்றோர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக சிறை செல்வதை பிள்ளைகள் விரும்பமாட்டார்கள், ஆகவே திருமணத்துக்காக தான் நிர்பந்திக்கப்படுவதை வெளியில் சொல்ல அவர்கள் முன்வராமலேயே போவதற்கு இந்த புதிய சட்டம் வழிவகுத்துவிடலாம் என அச்சங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அது போன்ற கவலைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவ்வாறான பிரச்சினைகள் வராதபடி புதிய சட்டம் வடிவமைக்கப்படும் என அரசாங்கம் தெரிவிக்கிறது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s