திருமணம் பொருத்தம்

திருமணம் பொருத்தம்:

1. தினப் பொருத்தம்:

மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன்நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால்வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று வருமானால் இருவருக்கும்தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப்பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவதுபெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரைஎண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப்பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன், மணமகள்இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப்பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள்இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது பொருந்தாதுஎன்பதும் ஒரு கணிப்பு. மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரேநட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில், மணமகனுக்கு அந்தநட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்தபாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால், அது சுபப்பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக,இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால்,மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்குகிருத்திகை 2,3 அல்லது 4-வது பாதம் என்று இருந்தால்,மணமகனுக்கு மேஷ ராசியாகவும், மணமகளுக்கு ரிஷபராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறதுஎன்பதால், இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.

அதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாகஇருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில்இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தமாகத்தான்கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன், மணமகள்இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்தராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2,3-ம் பாதங்கள்,திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்) மணமகனுக்குமிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லதுபுனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும்ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

2. கணப் பொருத்தம்:

மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில்சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம், 2. மனித கணம், 3.ராட்சஸ கணம்.

தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம்,ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகியநட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி,திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி,உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில்கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை,மூலம், அவிட்டம், சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன்மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச்சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்விக்கலாம்.இருவருக்கும் முறையே தேவகணம், மனித கணமாக இருந்தால்இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச்சார்ந்தவராக இருந்து மணமகளும், அதே கணத்தவளாகஇருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடையநட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், இதுவும்கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸகணமாகவும், மணமகன் தேவ கணமாவோ, மனித கணமாகவோஇருத்தல் கூடாது. ஆனால், மணமகள் மனித கணமாகவும்,மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம்சரியானதே.

 3. மகேந்திரப் பொருத்தம்:

பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும்எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இதுமகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம்மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம்அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாகஇருக்கும்.

 4. பெண் தீர்க்கப் பொருத்தம்:

மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம்வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண்தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தஎண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம் என்றுகூறுவதுண்டு, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும்,அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப்பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால்வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும்கிட்டும்.

 5. யோனிப் பொருத்தம்:

இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும்அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்னமிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்தமிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்றுபார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது, அசுவினி, சதயம் -குதிரை; பரணி, ரேவதி – யானை; கார்த்திகை, பூசம் – ஆடு; ரோகிணி,மிருக சீரிஷம் – பாம்பு; திருவாதிரை, மூலம் – நாய்; புனர்பூசம்,ஆயில்யம் – பூனை; மகம், பூரம் – எலி; உத்திரம், உத்திரட்டாதி-பசு;ஹஸ்தம், சுவாதி – எருமை; சித்திரை, விசாகம் – புலி; அனுஷம்,கேட்டை – மான்; பூராடம், திருவோணம் – குரங்கு; உத்திராடம் -கீரி;அவிட்டம், பூரட்டாதி – சிங்கம்.

இந்த மிருக அம்சங்களில், குதிரை – எருமை, யானை – சிங்கம்,ஆடு- குரங்கு, பாம்பு – எலி, பசு – குதிரை, எலி- பூனை, கீரி – பாம்பு,மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர்அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள்ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம்என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும்நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

 6. ராசிப் பொருத்தம்:

மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலானஎண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம்எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம்என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசியாகஅமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்றுகொள்ளலாம். அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப்பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால்,பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப்பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.

 7. ராசி அதிபதிப் பொருத்தம்:

ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதியார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில்.மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாகஅமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இருஅதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும்விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப்பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும்அன்னியோன்யமாக இருப்பார்கள்.

8. வசியப் பொருத்தம்:

ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை;எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப்பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு – சிம்மம்,விருச்சிகம்; ரிஷபத்துக்கு – கடகம், துலாம்; மிதுனத்துக்கு – கன்னி;கடகத்துக்கு – விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு – துலாம்;கன்னிக்கு – மிதுனம், மீனம்; துலாத்துக்கு – கன்னி, மகரம்;விருச்சிகத்திற்கு – கடகம், கன்னி; தனுசுக்கு – மீனம்; மகரத்துக்கு – மேஷம், கும்பம்; கும்பத்துக்கு – மேஷம், மீனம்; மீனத்துக்கு-மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால்,அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவைபொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர்ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரைமற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனியவாழ்க்கை நடத்துவார்கள்.

 9. ரஜ்ஜுப் பொருத்தம்:

அசுவினி, மகம், மூலம் – ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை,ரேவதி – அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் – ஆரோகதொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி – அவரோக தொடைரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – ஆரோக உதர ரஜ்ஜு,புனர் பூசம், விசாகம், பூரட்டாதி – அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி,அஸ்தம், திருவோணம் – ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை,சுவாதி, சதயம் – அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை,அவிட்டம் – சிரோ ரஜ்ஜு.

இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரதுநட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரேவரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றுகொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும்வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டுநட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி,இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம்.மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

10. நாடிப் பொருத்தம்:

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை,மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிணபார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம்,சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவைமத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி,விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவநாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச்சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்றுஅர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச்செய்யும்.

Advertisements

One thought on “திருமணம் பொருத்தம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s