கூடலூர் செக்ஷன் 17 வரலாறு

ஊட்டி, ஜூன் 11 – 2002 (Dinamalar)

‘தென்னிந்தியாவின் நீர் தொட்டி’ என வர்ணிக்கப்படும் நீலகிரியில் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகள் இருப்பது கூடலூர் பகுதிகளில் தான். மாயார், பொன்னேரி, பாண்டியாறு – புன்னம்புழா, பவானி ஆகிய ஆறுகள் இந்த உயிர்ச்சூழலில் தான் உற்பத்தியாகின்றன.
கேரள மாநிலம் நிலம்பூர் கோவிலகத்துக்கு சொந்தமான நிலங்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் பரவலாக இருந்தன. இந்த நிலப்பகுதிகள் 1845ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி அப்போதைய சிற்றரசர்களால் சிலருக்கு குத்தகை விடப்பட்டன.
பின்பு அவர்களிடம் இருந்த நிலங்கள் பெரிய நிறுவனங்கள் வசம் குத்தகைக்கு விடப்பட்டன. குத்தகைக்கு விடப்பட்ட பகுதிகளில் இருந்த பல கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. வனங்களாக இருந்த பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலை, காப்பி, ஏலம், குறுமிளகு போன்ற பணப்பயிர்களாக மாற்றி அமைக்கப்பட்டன. 1969ம் ஆண்டு ஜமீன்தாரர் சட்ட ஒழிப்பு கொண்டு வந்த போது குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் மேற்படி ‘செக்ஷன் 17 ’ என்ற பிரிவிற்கு உட்படுத்தப்பட்டன. இந்த பிரிவின் கீழ் 80 ஆயிரத்து 88 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. ஜென்ம ஒழிப்பு சட்டத்தின் படி, ஜென்ம நிலங்களை தமிழக அரசு தன்வசம் கொண்டு வர முயன்றது. இதனை எதிர்த்து மஞ்சுஸ்ரீ பிளாண்டேஷன் உட்பட 9 நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதே காலகட்டத்தில் கேரள அரசு தனது மாநில பகுதியில் உள்ள குத்தகை நிலங்கள் அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ‘ரிசர்வ் பாரஸ்ட்’ அறிவித்தது. ஆனால், தமிழக அரசு இதனை அறிவிக்காமல் மெத்தனமாக இருந்துவிட்டது.
குத்தகை தாரர்கள் தொடுத்த வழக்கின் பேரில் இந்த நிலங்களை விவாதத்திற்குரிய பகுதியாக அறிவித்தது. இந்த பகுதியில் புதிதாக வளர்ச்சி திட்டங்களோ, விவசாயமோ மேற்கொள்ளக்கூடாது என சுப்ரீம் கோர்ட் 1969ம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும், நிலத்தை வாங்கவோ, விற்கவோ, பட்டா வழங்கவோ, கையகப்படுத்தவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏற்கனவே, விவசாயம் செய்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் சிறிதளவு கூட ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.
அதேபோன்று செக்ஷன் 17 நிலங்களில் எந்த வித சட்ட விரோத செயல்களும் நடக்கக்கூடாது என்று 1978ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. நில உடைமைதாரர்கள் யார் என்பது முடிவாகாத வரையில் கூடலூர் பகுதியில் உள்ள செக்ஷன் 17 நிலங்கள் எந்தவித பரிமாற்றங்களுக்கும் உட்படுத்தக்கூடாது என மாவட்ட நிர்வா கம் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு வந்தது. ஆனால், இந்த உத்தரவு மதிக்கப்படவில்லை. வனங்கள் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டங்களாக மாற்றப்பட்டன. மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன.
கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் செக்ஷன் 17 நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக 481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கிற்கு வராமலேயே இன்னும் பலர் நிலங்களை கையகப்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ‘சிறு விவசாயிகள்’ என்ற போர்வையில் பட்டா கோரி போராடி வருகின்றனர்.
செக்ஷன் 17 நிலங்கள் தொடர்பாக நடந்து வந்த வழக்கின் தீர்ப்பு 1999ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. மஞ்சு ஸ்ரீ பிளாண்டேஷன் உட்பட 9 நிறுவனங்கள் தொடர்ந்த இந்த வழக்கில் நில உபயோகிப்பாளர்கள் தங்களது நிலங்களுக்கு பட்டா பெற தமிழக அரசை அணுகுமாறு தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலங்களுக்கு பட்டா பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு நில உபயோகிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள ஜென்ம நிலங்கள் நில ஆக்கிரமிப்பாளர்களிடையே உள்ளது. இவற்றில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பிளாண்டேஷன் நிறுவனங்களிடலும், 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வனப்பகுதிகளாகவும், மீதமுள்ள பகுதிகள் பணப்பயிர் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு உறுதியான முடிவு எதுவும் எடுக்காத நிலையில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. பல கோடி மதிப்புள்ள வனங்கள் அழிக்கப்படுவதுடன் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. இதில், நீர் பிடிப்பு பகுதிகளின் பெரும்பாலான இடம் எஸ்டேட்களின் கைவசம் சிக்கியுள்ளது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் என்பது 5 ஆயிரத்து 520 சதுர கி.மீ., பரப்பளவு உடையது ஆகும். இவற்றில் முக்கிய நீர் தொட்டியாக விளங்குவது விளங்குவது கூடலூர் பகுதியாகும். இதனால் தான் இந்த பகுதி பொன் விளையும் பூமியாக திகழ்கிறது. இங்கு தேயிலை, காபி, ஏலம், குறுமிளகு, பட்டை, லவங்கம், பாக்கு, தென்னை என எல்லா வகை பயிர்களும் இங்கு பயிரிடப்படுகின்றன. இங்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்தாலே லட்சாதிபதி என்ற நிலை இருப்பதால் ஆக்கிரமிப்பு செய்வதற்கு உயிரை கூட கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்.
இங்குள்ள வனங்களில் உயர்ந்த ரக மரங்களை வெட்டி கடத்துவதற்காக கும்பல் ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது. மேலும், இங்கிருந்து கடத்தப்படும் மரங்களை வாங்குவதற்காகவே கேரளாவில் இருந்து இங்கு வரும் ‘சேட்டன்மார் குரூப்’ முகாமிட்டு இவற்றை கடத்தி வருகிறது.
இதற்காக கேரள எல்லையை தாண்டியவுடன் சில பகுதிகளில் மரங்களை அறுப்பதற்கான மரம் அறுக்கும் மில்களும் இயங்கி வருகின்றன. நீலகிரியில் இருந்து கட்டைகளாக மாற்றி கடத்தப்படும் மரங்கள் இந்த மில்களில் பலகைகளாக பல வடிவங்களாக மாற்றி மீண்டும் தமிழகத்தில் கொண்டு வந்து விற்கப்படுகின்றன. இவ்வாறு கடத்தலை தடுக்க கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு கண்டுகொள்வதாக இல்லை.

 

 

என்னதான் சொல்கின்றன இந்த செக்ஷன் 17 நிலங்கள்.

கூடலூரில் உள்ள செக்ஷன் 17 நிலங்களில் ஆக்கிரமிப்புகள் நடப்பதற்கு சட்டங்களில் உள்ள ஓட்டைகளே காரணம் என கூறப்படுகிறது. 1969ம் ஆண்டு தமிழக வனத்துறை அமைச்சர் மதியழகன் இருந்த போது, கொண்டுவரப்பட்ட கூடலூர் ஜென்மம் எஸ்டேட்ஸ் தொடர்பான சட்டத்தில் உள்ள பல்வேறு செக்ஷன்கள் ஆக்கிரமிப்பாளர்கள் தப்பிப்பதற்கான வழிமுறைகள் பல உள்ளதாக வனத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஞ்தஞீச்டூதணூ ஞ்ஞுணட்ச்ட் ஞுண்ணாச்ணாஞுண் ச்ஞணிடூடிணாடிணிண ச்ணஞீ ஞிணிணதிஞுணூணாடிணிண ணூணிதூச்ணாதீச்ணூடி ச்ஞிணா துதுடிதி ணிஞூ 1969. என்ற சட்டத்தில் கூறப்பட்டுள்ள செக்ஷன் விபரம்:
செக்ஷன் 8:
இந்த செக்ஷன் நிலம்பூர் கோவிலகத்தின் வாரிசுகள், உறவினர்கள் பாத்தியதைக்கு உட்பட்ட நிலங்களை பற்றி கூறுகிறது. 1969ம் ஆண்டு ஜூன் முதல் தேதிக்கு முன்னர் 3 வருடங்களுக்கு அந்த நிலத்தில் விவசாயம் செய்தவருக்கு பட்டா வழங்கலாம் என்று இந்த பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேே நரத்தில் இந்த நிலத்தில் சம்மந்தப்பட்டவரே உழைத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
செக்ஷன் 9: ஜென்மிகளுக்கும், நிலங்களில் வாடகைக்கு விவசாயம் செய்தவருக்கும் உள்ள தொடர்பை கூறுகிறது. 1969ம் ஆண்டு ஜூன் முதல் தேதிக்கு முன்னர் 3 வருடங்களுக்கு ஜென்மியிடம் அதாவது நிலம்பூர் கோவிலகத்திற்கு சொந்தமானவர்களிடம் வாடகைக்கு இருந்தவர்களுக்கு அந்த நிலங்களில் அவர்களே உழைத்து விவசாயம் செய்திருந்தால் பட்டா கொடுக்கலாம் என்று இந்த செக்ஷனில் கூறப்பட்டுள்ளது.
இந்த செக்ஷனின் அடிப்படையிலேயே தங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென்று ‘பிளாண்டேஷன்ஸ்’ நிறுவனங்கள் கோர்ட்டில் வலியுறுத்தினர். ஆனால், வாடகைதாரர்களின் பட்டியலில் இவர்களின் பெயர் ஏதும் இடம்பெறவில்லை என வனத்துறையின் வாதமாக உள்ளது.
செக்ஷன் 10: ஜென்மியாகவும் இல்லாமல், வாடகைதாரராகவும் இல்லாமல் 1969ம் ஆண்டு ஜூன் முதல் தேதிக்கு முன்னர் தொடர்ந்து விவசாயம் செய்தவர்களுக்கு பத்திரம் இல்லாத பட்சத்திலும் அரசு இந்த நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து குறிப்பிட்ட தேதியில் இருந்து பட்டா கொடுக்கலாம்.
செக்ஷன் 11: இந்த பிரிவில் மட்டுமே எந்தெந்த நிலங்களுக்கு பட்டா கொடுக்கக்கூடாது என்று விளக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகள், கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகள் இவற்றின் கரைகள், கோவில் இடங்கள், வண்டிப்பாதைகள், கிராம பாதைகள், மாட்டு தொழுவங்கள், ஆறுகள், மற்ற புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றிற்கு பட்டா வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
செக்ஷன் 17: இந்த பிரிவின் படி பட்டா கொடுக்க அரசுக்கே உரிமையில்லை. குத்தகைதாரர்களுக்கு (லெஸ்லீஸ்) குத்தகை தொகையை மட்டும் புதுப்பிக்கவும், இந்த தொகையை அதிகரிக்கவுமே மட்டும் அரசுக்கு அதிகாரம் உள்ளது. தேயிலை, காபி, ஏலம் போன்ற தோட்டபயிர்கள் தொடர்பாக இந்த செக்ஷனின் மட்டுமே கூறப்பட்டுள்ளது. தோட்டப்பயிர்களை விளைவிப்பதற்காக மட்டுமே குத்தகை முறை ஏற்படுத்தப்பட்டதாக இந்த பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.
இந்தபிரிவில் செக்ஷன் 8 ஜென்மீக்கள் பற்றியும், செக்ஷன் 9 வாடகைதாரர்கள் பற்றியும், செக்ஷன் 10 ஆவணங்கள் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்தியவர்கள் பற்றியும், செக்ஷன் 17 தோட்டப்பயிர்கள் குத்தகையிடும் குத்தகைதாரர்கள் பற்றியும் கூறுகின்றன. செக்ஷன் 9 மற்றும் செக்ஷன் 10ல் விவசாயம் செய்தவர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தோட்டப்பயிர்கள் பற்றி இந்த பிரிவில் எதுவும் கூறப்படவில்லை.

 

செக்ஷன் 17 நிலங்களுக்கு உட்பட்ட நில பரப்புகள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என்பன பற்றிய விபரம்:
கூடலூரில் 9 ஆயிரத்து 937.89 ஏக்கர், ஓவேலியில் 25 ஆயிரத்து 538.31 ஏக்கர், பாடந்தொரையில் 7 ஆயிரத்து 818 ஏக்கர், செருமுள்ளியில் 7 ஆயிரத்து 277.97 ஏக்கர், சிறுமுள்ளியில் 2 ஆயிரத்து 737.10 ஏக்கர், தேவாலாவில் 11 ஆயிரத்து 735.73 ஏக்கர், நெல்லியாளத்தில் 11 ஆயிரத்து 760.37 ஏக்கர் நிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல சேரங்கோடு, முதுமலை, மும்மநாடு பகுதிகளிலும் மீதமுள்ள ஜென்ம நிலங்கள் பரவிகிடக்கின்றன.
***

ஓவேலி மற்றும் ஊசிமலை அடிவார வனப் பகுதிகளில் உள்ள 920 ஏக்கர் நிலங்களுக்கு 1998ம் ஆண்டு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது. இதில் ஒரு சிலருக்கு 250 ஏக்கர், 125 ஏக்கர், 112 ஏக்கர் வரை பட்டா வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த நிலங்களுக்கு பட்டா வழங்க தகுதி உடையதில்லை. மேலும் நில ஒப்படைப்பு சட்டத்தின்படி 30 ஏக்கருக்கு மேல் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என்ற உத்தரவும் உள்ளது. இதனையும் மீறி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s