தமிழை சுவாசிக்க புத்தகங்களை வாங்குங்க….

ஊட்டியை சேர்ந்தவர் புலவர்.இரா.கமலம். பிறந்த இடமோ ஈரோடு. வளர்ந்து வாழ வைத்த இடமோ ஊட்டி. தமிழ் வாசத்தை சுவாசித்த இவரின் கல்லுாரி வாசம் மதுரை தமிழ் சங்கம். தமிழை வளர்த்த தமிழ் சங்கத்தில் தமிழ் இலக்கியத்தை கலக்கி குடித்தவர். பேரூர் ஆதீனத்தில் சைவ ஆதீனம் தமிழ் கல்லுாரில் சைவ சித்தாந்தம் முடித்தவர்.
தேனாடு அரசு ஆரம்ப பள்ளியில் தலைமையாசிரியராக பணிக்கு சேர்ந்து, காத்தாடிமட்டம் அரசு பள்ளி, மேலுார் ஒசஹட்டி பள்ளி, நுந்தளா, இத்தலார் பள்ளி, கல்லக்ெகாரை பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு தமிழை சுவாசிக்க வைத்து வளம் காண வைத்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றாலும் தமிழுக்காக ஓயாமல் எழுத்துப்பணியில் தீவிரம் காட்டி வருகிறார். மொத்தம் 2011ம் டிசம்பர் வரை 15 புத்தகங்கள் எழுதியுள்ளார். ‛இணையிலா எமது தமிழ்’, தாயும் தனயனும், என் தெய்வம் ஸ்ரீ சத்யசாயி, எனக்கு பிடித்த படுக சமுதாயம், கொங்கு நாட்டு தங்கம் எமது சமுதாயம் ஆகிய புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில நூல்கள் உதகை மாவட்ட மைய நுாலகத்தில் ெவளியிடப்பட்டன. ெகாங்குநாட்டு தங்கம், எமது சமுதாயம் ஆகிய புத்தகங்களை முன்னாள் அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் ெவளியிட்டார்., நலம் தரும் நாட்டு வைத்தியம், இவளா என் மனைவி தற்போது வெளியிடப்பட உள்ளன. தற்ேபாது டாக்டர் அம்பேத்கார், நாடு போற்றும் நால்வர், பாபாவின் தேனமுது பகுதி 1, பகுதி2, மணமக்கள் உட்பட பல நூல்கள் அச்சகத்தில் தயாராகி வருகிறது. 70 வயதாகும் இவரால் புத்தகங்களை விற்பனை செய்ய முடியாமல் தற்போது அலமாறிகளில் உறங்கிக்கிடக்கின்றன. இவற்றை வாங்கி பலரும் பயன்பெற அழையுங்கள்… மொபைல் எண்: 9443604409.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s