இராணுவத்துக்கும் சந்தைக்கும் உதவிய தந்தி!

 

கட், கட ஒலிகள் கேட்காது. “மெசஞ்சர் வருகிறார்…’ என்ற வார்த்தையும் இனி ஒலிக்காது. தந்தி என்ற குரலைக் கேட்டாலே அடிவயிற்றிலிருந்து எழும் பீதியும் இனி இருக்காது. ஆமாம், நிறைவடைந்துவிட்டது தந்தியின் சேவை.
 ஆங்கிலேயர்களால் நீலகிரியில் கடந்த 1855ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தந்தி சேவை, இந்த ஆண்டுடன் நிறைவடைந்துவிட்டது. இந்த தந்தி தொடர்பைக் குறித்து சற்றே பின்னோக்கி பார்ப்போமா? தந்தி குறித்த தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் தேசிய விருது பெற்ற முன்னாள் தபால் அலுவலர் நா.ஹரிகரன்:
 “”ஐரோப்பாவை சேர்ந்த விட் ஸ்டோன், குக்கி ஆகியோர் அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் மோர்ஸýடன் இணைந்து 1837ஆம் ஆண்டில் தந்தி குறியீட்டை கண்டுபிடித்தார்கள். அத்துடன் அதற்கான காப்புரிமையையும் உடனடியாகப் பெற்றார்கள். 1787ஆம் ஆண்டிலேயே லாண் மோன்டே என்பவர் தந்தி கருவியை கண்டு
 பிடித்திருந்தாலும், டல்ஹெளசி பிரபுதான் தந்தி சேவையை இந்தியாவில் தொடங்கி வைத்த
 வராவார்.
 இந்தியாவுக்கான முதல் தந்தி சேவை கொல்கத்தாவிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள டைமண்ட் ஹார்பருக்கு 5.11.1850இல் தொடங்கியது. அதன் பின்னர் 1851இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கான தந்தி சேவை தொடங்கப்பட்டு 1853இல் தந்திக்கென தனி இலாகாவும் உருவாக்கப்பட்டது. 1854ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 4,000 மைல் தூரத்துக்கு தந்தி லைன் அமைக்கப்பட்டது.
 பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான தொலைத்தொடர்பு கேபிள் கடலுக்கடியில் கடந்த 1870ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் 1893ஆம் ஆண்டில் நாட்டின் முதல் தந்தி நிலையம் அமைக்கப்பட்டு, 1885இல் இந்திய தந்தி சட்டம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மோர்ஸ் முறையே கையாளப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக டெலிபிரிண்டர், டெலக்ஸ், வெப் பேஸ்டு டெலி மெசேஜ் என பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்டாலும் பொதுவான பெயராக தந்தி என்றே குறிப்பிடப்
 பட்டது.
 1853ஆம் ஆண்டில் கொல்கத்தா-பெஷாவர்-மும்பை-சென்னை- பெங்களூரு-நீலகிரி ஆகிய 6 பகுதிகளுக்கு தந்தி தொடர்பு இணைக்கப்பட்டது. இதற்காக 6,400 கி.மீ. தூரத்துக்கு தந்தி லைனும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பெங்களூருவிலிருந்து உதகைக்கு வந்த இணைப்பு, அப்போதைய ஆங்கிலேயே கவர்னர் ஜெனரலான டல்ஹெளசி பிரபுவின் வசதிக்காக கோத்தகிரிக்கு நீட்டிக்கப்பட்டு 1855ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இணைப்பும் வழங்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து நீலகிரிக்கான இணைப்புக்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.25,500 மட்டுமே. தொடர்ந்து உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் வழியாக சென்னைக்கான இணைப்பு வழங்கப்பட்டது” என்றார் ஹரிகரன்.
 தந்தி என்றாலே நம்பகத்தன்மை என்ற அர்த்தமும் உள்ளது. ஏனென்றால் உடல் நலம், தேர்வு முடிவுகள், வேலைவாய்ப்பு, அவசர வருகை, உறவினர்களின் பிரிவு, திருமணம், பிறந்தநாள் வாழ்த்து உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் தந்தியையே நம்பியிருந்த காலமுண்டு. அதிலும் மலைமாவட்டமான நீலகிரியில் தொலைத்தொடர்பு சேவை வளர்ச்சியடையாத காலகட்டத்தில் தந்தியையே நம்பியிருந்தனர்.
 உதாரணமாக, மேட்டுப்பாளையம் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் கூட தந்தி செய்தி மூலம் நீலகிரிக்கு தெரிவிக்கப்பட்டதாம். அதனடிப்படையிலேயே எந்த காய்கறியை எப்போது சந்தைக்கு கொண்டு செல்வது என விவசாயிகள் தீர்மானிப்பார்களாம்.
 அதேபோல, ராணுவ முகாமும் நீலகிரியில் அமைந்துள்ளதால் ராணுவ வீரர்களுக்கான தகவல்களும் தந்தி மூலமே பெறப்பட்டு வந்துள்ளது. இன்னமும் அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்களின் விடுப்பு மற்றும் முக்கிய தகவல்கள் தந்தி மூலம் அனுப்பப்படுவதை அங்கீகரிப்பதோடு, அதை ஆவணமாக பதிவு செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.
 மோர்ஸ் முறையில் “கட’ என்ற குறியீட்டுக்கு – (டேஷ்), “கட்’ என்பதற்கு . .(இரு புள்ளிகள்) என்று அர்த்தமாம். தற்போது ஏற்பட்டுள்ள தொலைத்தொடர்பு வளர்ச்சியின் காரணமாக எத்தனை குறுஞ்செய்திகள் வந்தாலும், அவற்றில் தந்தியில் வந்த எந்த செய்தியாக இருந்தாலும் அதிலிருந்த நம்பகத்தன்மை இதில் இல்லை என்பதால் தந்தி சேவை நிறுத்தப்பட்டதில் நீலகிரி உள்ளிட்ட பெரும்பான்மையான மக்கள் அனைவருக்குமே வருத்தம்தான்.

 

By  – ஏ.பேட்ரிக், தினமணி.

First Published : 21 July 2013 08:48 AM IST

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s