நாங்களும் சோழர் பரம்பரை தான்!

on

ஆறுமுகம் அய்யாசாமி

மனிதர்கள் தாங்கி நிற்கும் பட்டப்பெயர்கள் சுவாரஸ்யம் மிகுந்தவை. அவற்றின் உருவாக்கத்திலும் பயன்பாட்டிலும் மிகுதியான அன்பும், மிதமிஞ்சிய வெறுப்பும் முக்கிய பங்காற்றுகின்றன. 
உடல், மொழி, ஊர், தொழில் சார்ந்த பட்டப்பெயர்களை காட்டிலும், குணம் சார்ந்த பட்டப்பெயர்களே நிலை பெறுகின்றன. அவற்றின் மீதான தமிழர்களின் ஆர்வம், நூற்றாண்டுகளை கடந்தது.
கங்கை கொண்டான், கடாரம் வென்றான், வாதாபி கொண்டான் என்பதெல்லாம் காலத்தால் அழியாப்புகழ் பெற்ற தமிழர்களின் பட்டப்பெயர்கள்.
சிலரது  பட்டப்பெயர்கள் கல்வெட்டில் எழுதியது போல் அனைவரது மனதிலும் நிலை கொண்டு விடும். கடைசியில் வெறும் பெயரை சொன்னால், உறவினர்களுக்கு கூட தெரியாது; பட்டத்தையும் சேர்த்துச்சொன்னால் தான் தெரியும். 
தலை சொட்டையாக இருப்பவர்களுக்கு இயற்கையாகவே பெயர் அமைந்து விடும். அறுவைக்குப் புகழ் பெற்ற என் நண்பர் ஒருவருக்கு ‘அறுப்பான்’ எனப்பெயர் சூட்டியது நண்பர் கூட்டம். 
எந்நேரமும் பெண்களிடம் வழிந்து பேசும் அன்பர்களுக்கும், சிடுசிடுக்கும் நண்பர்களுக்கும், தானாகவே பெயர்கள் தேடி வரும். 
பள்ளியில் படித்தபோது ‘கரண்டி’ என்று அழைக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் இருந்தார். ‘எதனால் அவருக்கு அப்பெயர் நிலைத்தது’ என்ற வரலாற்றுத்தகவலை அறிந்து கொள்ள, நானும், நண்பர்கள் பலரும் முயன்றதுண்டு. ‘காலம் காலமாக அவர் அப்படியே அழைக்கப்பெறுவதாகவும், காரணம் சரிவரத் தெரியவில்லை’ என்றும், எங்களுக்கு முன் படித்தவர்கள் கைவிரித்து விட்டனர்.
முற்காலத்தில் அவர் ஏதோ ஒரு மாணவரை கரண்டியால் அடித்து விட்டபடியால் அப்பெயர் நிலைபெற்றதாக சிலர் கூறியதுண்டு. பாத்திரத்தில் இருப்பதை துளி கூட  மீதமின்றி எடுத்து ஊற்றுவதைப்போல, பாடத்தை மிச்சம் மீதமின்றி…

View original post 239 more words

Advertisements

One Comment Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s