குன்னூரில் குருமூர்த்திக்கு தர்ம அடி

படம்

குன்னூரில் பா.ஜ., வெற்றி விழாவில் பங்கேற்ற குருமூர்த்திக்கு தர்ம அடி விழுந்தது; இது தொடர்பாக இரு தரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குருமூர்த்தி, மாற்று கட்சியினருக்கு விலைபோயுள்ளது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இந்த சம்பவம் கட்சியினர் மட்டுமின்றி மக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நேற்று முன்தினம் குன்னூரில் பா.ஜ.,வினர் பலரும் பட்டாசு வெடித்து, கொண்டாடினர்.
இதில், பா.ஜ., மாவட்ட வர்த்தக அணி தலைவர் கிருஷ்ணகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், நகர தலைவர் பாப்பண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த விழாவில் குருமூர்த்தி பங்கேற்றார். அப்போது இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் வெங்கட், பா.ஜ., நகர பொறுப்பாளர்கள் அன்பரசன், பிரபாத் ஆகியோர் அங்கு வந்து, குருமூர்த்தி பங்கேற்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு தாக்குதல் நடந்தது. இதில் குருமூர்த்திக்கு தர்ம அடி விழுந்தது. அதே நேரத்தில் குருமூர்த்தியும், ஆதரவாளர்களும் எதிர்தரப்பினரை தாக்கியுள்ளனர். இதன்பிறகு குன்னுõர் பெட்போர்டு பகுதியில் பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் குட்டன் தலைமையில், நடந்த வெற்றி விழாவிற்கு குருமூர்த்தி மற்றும் ஆதரவாளர்கள் அங்கும் வந்ததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக குருமூர்த்தி மற்றும் பாப்பண்ணன், மணிகண்டன், பாலாஜி மற்றும் ஆதரவாளர்கள் மீது மேல் குன்னுõர் போலீசில் குட்டன் குழுவினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த இரு சம்பவங்களில் பாப்பண்ணன், அன்பரசன் காயமடைந்து குன்னுõர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இருதரப்பு புகார்களின் பேரில் குருமூர்த்தி தரப்பினர் மீது குன்னூர் டவுன், அப்பர் குன்னூர் போலீசாரும், வெங்கட் தரப்பினர் மீது குன்னூர் டவுன் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வெங்கட் கூறுகையில், ‘குருமூர்த்தி பணம் வாங்கியது ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்பதை எதிர்த்ததால் குருமூர்த்தி அடியாட்களை வைத்து மிரட்டி எங்களை தாக்கினர்’ என்றார்.
குருமூர்த்தி கூறுகையில், ‘பா.ஜ., கட்சி நிகழ்ச்சியில், பொறுப்பில் இல்லாதவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதில், நகர தலைவர் பாப்பண்ணன் தாக்கப்பட்டார். இருவரையும் நான் தடுத்துவிட்டேன். வெங்கட், பிரபாத், பார்த்தீபன், அன்பு, குட்டன், ராஜ்குமார் ஆகியோர் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராஜாவிடம் பணம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக நகர தலைவர் பாப்பண்ணன் விசாரணை நடத்தி வருகிறார். இதன் காரணமாக பாப்பண்ணன் தாக்கப்பட்டுள்ளார்.’ என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s