அரசர்களின் அசுவமேத யாகம் நீலகிரியில்…. கோலாகலமாக துவங்கியது அதிருத்ர மகா யக்ஞம்

குன்னூர் அருகே சித்தகிரியில் உள்ள ஷீரடி பாபா கோவிலில் அதிருத்ர மகா யக்ஞத்தில் மலர்களால் அர்ச்சனை மேற்கொள்ளும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ரமணாஸ்ரமம் தலைவர் மவுனகுரு       ஸ்ரீசத்யானந்த மகாராஜ்
குன்னூர் அருகே சித்தகிரியில் உள்ள ஷீரடி பாபா கோவிலில் அதிருத்ர மகா யக்ஞத்தில் மலர்களால் அர்ச்சனை மேற்கொள்ளும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ரமணாஸ்ரமம் தலைவர் மவுனகுரு ஸ்ரீசத்யானந்த மகாராஜ்

குன்னூர் அருகே சித்தகிரியில் உள்ள ஷீரடி பாபா கோவிலில் அதிருத்ர மகா யக்ஞம் துவங்கியது.
குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் சித்தகிரியில், உலகிலேயே மிக உயர்ந்த 7.6 அடி உயரமுள்ள ஷீரடி பாபா கோவிலில் திருவுருவ சிலை கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தட்சிண பாரத பகவான் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை தலைவி சக்திமயி மாதா,
தலைமையில் 500 கிராமங்களுக்கு ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு அதிருத்ர மகா யக்ஞத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
கோவிலின் ஓராண்டு நிறைவையொட்டியும், பிரபஞ்ச வாழ்வாதாரங்களுக்காகவும், உலக நன்மைக்காகவும், இங்கு அதிருத்ர மகா யக்ஞம் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி துவங்கியது. 9 நாட்கள் தினமும் காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் இந்த யாகம் நடத்தப்படுகிறது. இதில், 64 சடங்குகள் மேற்கொள்ள, கர்நாடக மாநிலம் கோகர்ணா பகுதியில் இருந்து 121 விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டு தினமும் பாரம்பரிய முறைப்படி ருத்ரம், சமக்ஞம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
அதிருத்ர மகா யாக குண்டம் எழுப்பப்பட்டு அதில், கிழக்கு முதல் வடகிழக்கு வரை பிருத்வி, அக்னி, இயமானன், சூர்யன், ஜலம், வாயு, சந்திரன், ஆகாசம் ஆகிய குண்டங்கள் எழுப்பப்பட்டு, அதிதேவதைகளாக சர்வன், பசுபதி, விக்ரன், ருத்ரன், பவன், மகேஸ்வரன், மகாதேவன், பீமன் ஆகிய அதி தேவதைகளுக்கு 14 ஆயிரத்து 641 சமக்கமும், 1331 நமக்க பாராயணம் செய்யப்படுகிறது.
மேலும், பிம்பசுத்தி, ஸ்பர்சாகுதி, யாகசாலை, மெய்ஞானம், விஞ்ஞானம், அஷ்டபந்தனம், 1008 கலச அதிருத்ர யாயாகம், அஷ்டபந்தனம், மகாபிஷேகம் ஆகியவை நடக்கிறது. பூக்கள், வேர், கிழங்கு, கட்டை, காய், அரிசி, பட்டை, தானியங்கள் வகைகள் உட்பட ஆயிரக்கணக்கான மூலிகைகளும் யாகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு குபேர தரிசனத்திற்காக, ராஜபாளையம் தொழிலதிபர் வெங்கடேஷ் ராஜா வழங்கிய வெண்குதிரை உட்பட இரு வெண் குதிரைகளும் வைக்கப்பட்டுள்ளன. பழைய காலத்தில் அரசர் மேற்கொள்ளும் அசுவமேத யாகம் போன்று நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ரமணாஸ்ரமம் தலைவர் மவுனகுரு ஸ்ரீசத்யானந்த மகாராஜ் தலைமையில், சித்தகிரி பகவான் சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஸ்ரீ சக்திமயி மாதா, செயலாளர் ஸ்ரீநந்துபாபா முன்னிலையில் தினந்தோறும் யாக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு காலை மற்றும் மதியம் மாலையில் உணவு வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட சத்ய சாய்பாபா நிர்வாகிகளின் பஜனை நடந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ரமணாஸ்ரமம் தலைவர் மவுனகுரு ஸ்ரீசத்யானந்த மகாராஜ் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம் பழமை மாறி புதுமை புகுத்திவிட்டது. எங்குபார்த்தாலும் நோய்கள்தான் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடுதான் என்பது சில ஆராய்ச்சிகளின் தெரிய வந்துள்ளது. தற்போது மக்கள் தானிய வகைகளை 10 சதவீதம் மட்டுமே உட்கொள்கின்றனர். பணப்பயிர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. சில தானியங்கள் இன்று அழிந்துவிட்டது. இந்தியாவில், நீலகிரியும், காஷ்மீரும் தான் தானியங்கள் பாதுகாக்ககூடிய இடம். தற்போதைய சூழலில் 200 ஆண்டுகளில் தானியம் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதால் வரும் தலைமுறையினரிடையே தானியங்கள் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இங்கு 121 வேத விற்பன்னர்கள் மூலம் ஆயிரக்கணக்கான மூலிகைகள், தானியங்கள், பூக்கள், குதிரைகள் வைத்து அரசர்கள் நடத்திய அசுவமேத யாகமாக, இங்கு 9 நாட்கள் நடத்தி வரும் அதிருத்ர மகா யாகம் நடத்தப்படுகிறது. இதில், பாப்பரை என்னும் தானியம் இந்தியாவில் எங்கும் கிடைக்காததால், இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் இருந்து 310 டாலர்கள் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் பாப்பரை, சாமை ஆகியவற்றை பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மூதாதையர்கள் ஆரோக்கியமாக இருந்துள்ளனர். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இவை கிடைக்காததால், மூட்டுவலி, கால்வலி உட்பட பல்வேறு நோய்கள் அதிகரித்துள்ளது. மாவு பொருளான இதில் காந்தசக்தி அதிகமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுத்து தோட்டக்கலை மூலம் பயிரிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
நீலகிரியில் மாற்றுபெட்ரோலியம் தயாரிக்கும் பூஞ்சைகள் அதிகமாக கிடைக்கிறது. குறிப்பாக குன்னூர் அருகே எடப்பள்ளி சித்தகிரி உட்பட சுற்றுப்புறபகுதிகளில் இவை அதிகளவில் உள்ளன. வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்துடன் இணைந்து இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டால், நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும். இது குறித்து கலெக்டருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. சித்தகிரியில் தெய்வீக சக்தி அதிகரித்திருப்பதால், உலக சமுதாயத்திற்காக முதன் முறையாக அதிருத்ர மகா யாகம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் யாகத்திற்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர். தட்சிண பாரத பகவான் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை தலைவி சக்திமயி மாதா, தலைமையில் 500 கிராமங்களுக்கு ரத யாத்திரை மேற்கொண்டு யாகத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. கோவிலின் ஓராண்டு நிறைவையொட்டியும், பிரபஞ்ச வாழ்வாதாரங்களுக்காகவும், உலக நன்மைக்காகவும், இங்கு அதிருத்ர மகா யாகம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு, ஸ்ரீசத்யானந்த மகாராஜ் கூறினார்.
படுகர் கலாச்சார மைய அறக்கட்டளை நிறுவன தலைவர் மஞ்சை மோகன் கூறுகையில், “அரசர்கள் தான் அன்றைய காலத்திலே அசுவமேத யாகம் நடத்தினார்கள் என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதைப்போல இந்த 21ம் நுõற்றாண்டிலே அதிருத்ர மகா யக்ஞம் 9 நாட்கள் தொடர்ந்து காலை 9 மணி முதல் இரவு 9;00 மணி வரை நடப்பது என்பது நீலகிரி மாவட்டத்தின் வரலாற்றிலேயே முதலாவதாகும். இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சிமூலம் இந்த சித்தகிரி என்பது சித்தர்கள் வாழும் மலையாக வரும் வரலாற்று காலங்களில் இடம் பெறும் என்பதை எந்த வித சந்தேகமும் இல்லை’ என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.