சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது? கனவு பலிக்குமா?

ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி கனவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின் மாறுபாட்டால் விளைவது கனவு என்று ஆயுர்வேதம் விவரிக்கும். கனவுகள் குறித்து தேவகுருவான பிரகஸ்பதி பகவானும் விளக்கியுள்ளதாக ஞானநூல்கள் விவரிக்கின்றன. ப்ரச்ன மார்க்கமும் கனவுகள் பற்றி குறிப்பிடுகிறது. நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத கனவு கள் தோன்றுவதே உண்மையான கனவுகள் ஆகும். அப்படிப்பட்ட கனவுகளுக்கு உரிய பலன்களைத் தான் சொப்பன சாஸ்திரம் சொல்கிறது. கனவுகள் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். இரவு உறங்கும் போது எந்த நேரத்திலும் வரலாம். அதாவது படுத்துறங்கிய சில மணிகளிலோ, நள்ளிரவிலோ, விடியல் நேரத்திலோ வரக்கூடும். இப்படி நாம் காணும் கனவுகள் பலிக்கும் காலம் பற்றியும் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும்; இரண்டாவது … Continue reading சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது? கனவு பலிக்குமா?

Rate this:

இராணுவத்துக்கும் சந்தைக்கும் உதவிய தந்தி!

  கட், கட ஒலிகள் கேட்காது. “மெசஞ்சர் வருகிறார்…’ என்ற வார்த்தையும் இனி ஒலிக்காது. தந்தி என்ற குரலைக் கேட்டாலே அடிவயிற்றிலிருந்து எழும் பீதியும் இனி இருக்காது. ஆமாம், நிறைவடைந்துவிட்டது தந்தியின் சேவை. ஆங்கிலேயர்களால் நீலகிரியில் கடந்த 1855ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தந்தி சேவை, இந்த ஆண்டுடன் நிறைவடைந்துவிட்டது. இந்த தந்தி தொடர்பைக் குறித்து சற்றே பின்னோக்கி பார்ப்போமா? தந்தி குறித்த தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் தேசிய விருது பெற்ற முன்னாள் தபால் அலுவலர் நா.ஹரிகரன்: “”ஐரோப்பாவை சேர்ந்த விட் ஸ்டோன், குக்கி ஆகியோர் அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் மோர்ஸýடன் இணைந்து 1837ஆம் ஆண்டில் தந்தி குறியீட்டை கண்டுபிடித்தார்கள். அத்துடன் அதற்கான காப்புரிமையையும் உடனடியாகப் பெற்றார்கள். 1787ஆம் ஆண்டிலேயே லாண் மோன்டே என்பவர் தந்தி கருவியை கண்டு  பிடித்திருந்தாலும், டல்ஹெளசி பிரபுதான் தந்தி சேவையை இந்தியாவில் தொடங்கி வைத்த வராவார். இந்தியாவுக்கான முதல் தந்தி சேவை கொல்கத்தாவிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள டைமண்ட் ஹார்பருக்கு 5.11.1850இல் தொடங்கியது. அதன் பின்னர் 1851இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கான … Continue reading இராணுவத்துக்கும் சந்தைக்கும் உதவிய தந்தி!

Rate this: