அருவங்காடு தொழிற்சாலை மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்

3/4/2014
குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுமட்டுமின்றி இங்கு ஒப்பந்த தொழிலாளர்களும் பணியில் உள்ளனர். இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை இதன் அருகிலேயே உள்ளது.
இங்கு ஏற்படும் வெடி விபத்துகளுக்கும் இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இங்கு அடிப்படை தேவையான வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டை தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர். நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது 8 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில், ஒரே ஒரு ‘ஸ்ட்ரக்சர்’ மட்டுமே இவர்களை எடுத்து சென்றுள்ளனர். மேலும், 7 டாக்டர்கள் தேவைப்படும் நிலையில், ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளதாகவும், ஒப்பந்த அடிப்படையில் 3 டாக்டர்கள் பணியாற்றுன்றனர். இதனால், அவசர சிகிச்சைக்கு கூட அருகில் உள்ள வெலிங்டன் மருத்துவமனை, ஊட்டி, கோவைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், “சாதாரண சிகிச்சை பெற வேண்டுமெனில் கூட டாக்டர்கள் ஊட்டி அல்லது கோவைக்கு பரிந்துரைக்கின்றனர். தேவையான நவீன சிகிச்சை கருவிகளோ, அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளோ இங்கு இல்லை. ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளும் டாக்டர்களும் 3 மாதம் மட்டுமே பணியாற்றுகின்றனர்.’ என்றார்.
எனவே, தொழிற்சாலை நிர்வாகமும், மத்திய அரசும் தீவிர கவனம் செலுத்தி இந்த மருத்துவமனையை நவீனமயமாக்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisements

ஹாக்கி சிறப்பு பயிற்சி முகாம்

3/4/2014
குன்னூரில் மாணவ, மாணவியருக்கான ஹாக்கி சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீலகிரி மாவட்ட பிரிவு, நீலகிரி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் கடந்த ஏப்ரல் 28ம் தேதியில் இருந்து கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாமை குன்னூர், அருவங்காடு, உபதலை, ஜெகதளா பகுதிகளில் நடத்தி வந்தது. இதில், 16 வயதிற்குட்பட்ட 110 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இதன் நிறைவு விழா குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் தேவாரம் தலைமை வகிதது பேசுகையில், ‘நீலகிரியில் ஹாக்கி விளையாட்டை மேம்படுத்த செயற்கை இலை மைதானம் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும்.’ என்றார்.
தமிழ்நாடு ஹாக்கி சங்க துணை தலைவர் ஜெபரத்தினம், நீலகிரி மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் ரவிகுமார், செயலாளர் ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விதிமீறி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

3/4/2014
குன்னூரில் விதிமீறி இயக்கப்பட்ட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 10 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூரில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில், உரிய ஆவணங்கள், முதலுதவி சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளதா; அதிக குழந்தைகளை ஏற்றிச்செல்வதை தடுப்பது உட்பட விதிமுறைகளின் படி வாகனங்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பிக்-அப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வரி கட்டாமலும், ஆவணங்களின்றி இயக்கிய இரு பிக்-அப், ஜே.சி.பி., உட்பட 10 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில், ரூ.25 ஆயிரம் வரையிலான சாலை வரி கட்டாமல் இயக்கிய 10 வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து வெங்கட்ராமன் கூறுகையில், “தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்படும். இதேபோல, பள்ளி குழந்தைகளை அதிகளவில் ஏற்றிச்சென்றாலோ, சீருடை இன்றியோ, குடிபோதையில் வாகனங்களை டிரைவர்கள் இயக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மர்ம கார் பரபரப்பு

3/6/2014

குன்னூரில் கடந்த 10 நாட்களாக ஒரே இடத்தில் நின்ற மர்ம கார் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குன்னூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதியில், காவல்துறையினரும் ரோந்துபணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் அருகே டிசான்ஜரி சாலையில் வாகன பார்க்கிங் இடத்தில் கடந்த 10 நாட்களாக மாருதி ஷென் (டிஎன்07 கே 2001) என்ற எண் கொண்ட வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறைக்கு இப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரும் அங்கு வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால், மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தால், இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளும், இங்குள்ள கூட்டுறவு பண்டகசாலைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பெற வரும் ஏராளமான மக்களும் இதனை கண்டு கலக்கமடைகின்றனர்.
இந்த மர்ம கார் காரணமாக மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரை ஆய்வு செய்வதுடன், இங்கிருந்து கிரேன் மூலம் போலீசார் எடுத்து செல்ல வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரியில் காசநோய் பிரிவில் பணியாளர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் ‛கட்’; அமைச்சரிடம் புகார்

நீலகிரியில் காசநோய் பிரிவில், 650 பேர் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காதது குறித்து அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
குன்னுõர் அரசு மருத்துவமனையை நேற்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குன்னுõர் அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். இதில், காசநோய் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு அறைகள், பிரசவ வார்டு உட்பட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
அடுக்கடுக்கான புகார்கள்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காசநோய் பிரிவில் உள்ள 650 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக இவர்களுக்கு சம்பளமாக கொடுக்கவில்லை. ஆய்வின் போது, புதிதாக பணியில் சேர்க்கப்பட்டவர்களின் வருகைப்பதிவேடும் மறைக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்.
குன்னுõரில் மாதந்தோறும் 40க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் மேற்கொள்ளும் நிலையில், இங்குள்ள மகப்பேறு டாக்டர்களை ‘டெபுடேஷன்’ என்ற பெயரில் ஊட்டிக்கு அனுப்பப்படுவதற்கு தீர்வு காண வேண்டும். சுகாதார பிரிவில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதிப்பதால், கூடுதலாக சுகாதார ஊழியர்களை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் வந்து செல்வதில் சிரமம் உள்ளதால் வாகன வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இங்கு சமையலறைக்கு இருவர் மட்டுமே உள்ளதால், கூடுதலாக ஊழியர்களை சேர்க்க வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் அறிவுரையின் பேரில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தலைமை மருத்துவர் கார்த்திகேயன், இணை இயக்குநர், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கலைசெல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

உதகை,

Dinamani  Published : 24 May 2014 05:20 AM IST

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 93 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் முதலிடத்தை தலா 494 மதிப்பெண்களுடன் 5 பேரும், இரண்டாமிடத்தை தலா 492 மதிப்பெண்களுடன் 7 பேரும், மூன்றாமிடத்தை தலா 491 மதிப்பெண்களுடன் 12 பேரும் பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

கோத்தகிரி புனித மேரீஸ் ஹோம் பள்ளி மாணவி ஆர்.காயத்ரி, தூனேரி குருகுலம் பள்ளி மாணவி மிருதுளா, குன்னூர் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளி மாணவி நோரா ஜூடித், கூடலூர் பாத்திமா பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவி ஷாமிலி மற்றும் உதகை சாந்தி விஜயா பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவி சுருதி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

அதேபோல, கோத்தகிரி புனித மேரீஸ் ஹோம் பள்ளி மாணவி அகிலா, எம்.பாலடா விவேகானந்தா பள்ளி மாணவி தீபிகா, மாணவர் திலீப்குமார், தூனேரி சத்யசாய் பள்ளி மாணவி தனுஷ்யா, உதகை சாந்தி விஜயா பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவிகள் ஜெயப்பிரியா, விமித்ரா ரவீந்திரன், அனிக்கொரை அன்னை சாரதாதேவி பள்ளி மாணவி நிதிஸ்ரீ ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர்.

மாவட்டத்தில் மூன்றாமிடத்தை உதகை ஜெல் மெமோரியல் பள்ளி மாணவிகள் தீக்சனா, ஷீத்தல் கிருஷ்ணா, பிக்கட்டி பிரியதர்சினி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி மோனிஷா, மஞ்சூர் எம்.கே.பி. பள்ளி மாணவி நீத்திகா, கோத்தகிரி விஸ்வசாந்தி வித்யாலயா பள்ளி மாணவி நிவேதா, உதகை சாந்தி விஜயா பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவி பூஜா, குன்னூர் புனித மேரீஸ் மேனிலைப் பள்ளி மாணவி சரண்யா, குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் மேனிலைப் பள்ளி மாணவர் சரவணன், கேத்தி பாலடா கே.என்.எம். பள்ளி மாணவி சவுந்தர்யா மற்றும் தேவாலா ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளி மாணவி சுருதி ஆகியோர் மூன்றாமிடம் பெற்றனர்.

மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி முன்னிலையில் ஆட்சியர் பி.சங்கர் பரிசளித்துப் பாராட்டு தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை 5 பேர் பெறுவதும், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை 24 பேர் பெறுவதும் இதுவே முதல்முறை என்பதால்

கல்வித் துறை அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி: 93% மாணவ, மாணவியர் தேர்ச்சி