ஊட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தாத அறநிலையத்துறை

ஊட்டி: ஆகம விதிகளை முறையாக கடைபிடிக்காத இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால், ஊட்டி மாரியம்மன் கோவில், மகா கும்பாபிஷேகம் நடத்தாமல் இருப்பது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி மாரியம்மன் கோவில், சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கோவில் ஆகும்.  சந்தைக்கடை மாரியம்மன் கோவில், என அழைக்கப்படும்
முப்பெரும் தேவியர்:
இக்கோவிலில், இச்சா,  கிரியா, ஞானம் ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி என முப்பெருந்தேவிகளாக வீற்றுள்ளனர்.
இதில், ஒரே பீடத்தில் காளி, மாரி வீற்றிருப்பதும், காளி உக்கிரமாக இல்லாமல் சாந்தமாக வீற்றிருப்பதும் அதிசயமாக கருதப்படுகிறது.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சித்திரை தேர்த்திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், உள்ளூர் உபயதாரர்கள், ஆன்மிக அமைப்பினரும் பங்கேற்பது சிறப்பு பெற்றதாகும்.
முக்கிய திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேர் மீது உப்பு வீசி, நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருநாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் உடனடியாக குணமாகிறது என்ற நம்பிக்கையாலும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இத்தகைய பெருமை பெற்ற இக்கோவிலில், கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிகள் இருந்தும் இதனை முறையாக கடைபிடிக்காமல் விடப்பட்டுள்ளது.
இடிந்த கோபுரம்:
கோவிலில் இரு கோபுரங்கள் உள்ள நிலையில், பழைய கோபுரத்தின் சிங்க சின்னங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மழையால் இடிந்து விழுந்தன. இதனையும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
தீர்த்த குளத்தை காணோம்:
கோவிலுக்கு என பல ஆண்டுகளாக ஊட்டி மார்க்கெட்டிற்குள் அம்மன் கோவிலுக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் இருந்தது. ஆனால், நகராட்சியின் பிடியில் உள்ள இந்த தீர்த்தக்குளத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு, நகராட்சி அதிகாரிகளின் உடந்தையுடன் மூடப்பட்டு கட்டடமும் எழுப்பப்பட்டு விட்டது.
கோவிலுக்கு என இருந்த 
பக்தர்கள் கவலை:
ஊட்டி நகர அனைத்து இந்து ஒருங்கிணைப்பு அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், “கோவிலில் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளன. ஆட்சிகள் மாறினாலும், கும்பாபிஷேகம் நடத்துவதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. இதனை உடனடியாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
எனவே, விரைவில் கும்பாபிஷேகத்தை நடத்தி பக்தர்களின் கோரிக்கைகளை இந்து அறநிலையத்துறையினர் நிறைவேற்ற வேண்டும்.
இதுகுறித்து செயல் அலுவலர் லோகநாதன் கூறுகையில், “இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெற்றதும் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துவங்கப்படும்.” என்றார்.
எனவே, விரைவில் கும்பாபிஷேகத்தை நடத்தி பக்தர்களின் கோரிக்கைகளை இந்து அறநிலையத்துறையினர் கரிசனம் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.